TAMIL IS DIVINE
Tamil is divine in the sense that for millenniums it has been shaped as a language of bakti, as a language of worship, as a language that has been forged to praise the gods and make them be present with man. I have culled several relevant lines from the Sumerian Temple Hymns, and show how magnificently Tamil hymns were composed long long before the Vedas and how deeply the importance of Temple worship was grasped by these ancient Tamils, the Sumero-Tamils. At other places I have also provided evidences to show that Siddha tradition has also Sumerian origins.
These and similar studies are exploding the Aryan myth fed ceaselessly by some interested parties. The historical TRUTH has been twisted and turned to make the Aryans appear superior and the Dravidians inferior.
The Tamils have swallowed these false pills and allowed Sanskrit in their temples. Now there is an awakening, we know what the TRUTH is and are determined to give Tamil the right place in the Temples and world history. Here are the evidences:
சுமேருவே குமரி நாடு - சான்றுசுமேருவே குமரி நாடு - சான்று
சற்று ஒய்வு கிடைக்க, நான் திரட்டி வைத்திருக்கின்ற சுமேரு நூற்களில் ஒன்றாகிய "Forerunners to Udug Hul " என்னும் நூலை புரட்டிப் பார்த்தேன். இந்நூலை மிகவும் விரிவாக ஆயவேண்டும் எனற எண்ணம் எனக்கு நெடுங்காலம் உண்டு. நோய் தீர்க்கும் மந்திரங்களின் தொகுப்பாகிய இந்நூல் சித்த மருத்துவத்தை தோற்றியவர்கள் தமி ழரே என்பதற்கும் அது மிகவும் பழமையான ஓர் கலை எனபதற்கும் ஏறக்குறைய நாங்காயிர ஆண்டுகட்கு முன்பே இப்பொழுது தாந்திரிகம் எனப்படும் சமயம் இந்த சித்த பெருமக்களால் பெரிதும் வளர்க்கப்பட்டிருந்தது என்பதற்கும் சான்றாக இந்நூலும் இதனைப் போன்ற இன்னும் பலவும் இருக்கின்றன. மேலும் இந்நூலே சுமேரு எனப்பட்ட நாடு குமரி என்றும் கௌரி என்றும் அழைக்கப்பட்டது எனபதற்கு சான்றினையும் தருகின்றது.
இந்த நூலினை மூலங்களைக் கண்டு ஆஙகிலத்தில் பெயர்த்தெழுதியும் மொழிபெயர்த்தும் வெளியிட்டுள்ள ஆசிரியர் Markham J. Geller என்பார் ஆவர். (A.HA)ki எனப்படும் கோலெழுத்துக் குறியினை வாசிப்பதில் ஏற்பட்டுள்ள பிழைகளைச் சுட்டி அதனை ku-ma-ri என்று வாசிப்பதே பொருந்தும் என்பதற்கு திருத்தியதோர் மூல வரியை பின் வருமாறு தருகின்றார்.
இந்த நூலினை மூலங்களைக் கண்டு ஆஙகிலத்தில் பெயர்த்தெழுதியும் மொழிபெயர்த்தும் வெளியிட்டுள்ள ஆசிரியர் Markham J. Geller என்பார் ஆவர். (A.HA)ki எனப்படும் கோலெழுத்துக் குறியினை வாசிப்பதில் ஏற்பட்டுள்ள பிழைகளைச் சுட்டி அதனை ku-ma-ri என்று வாசிப்பதே பொருந்தும் என்பதற்கு திருத்தியதோர் மூல வரியை பின் வருமாறு தருகின்றார்.
eriduki ku"ar (A.HA)ki -se mu-un-na-ri he-me-en
sa ina eri-du ku-ma-ri re-hu-u ana-ku
sa ina eri-du ku-ma-ri re-hu-u ana-ku
இஙகு இரண்டாவது வரி முதலில் வரும் சுமேரு மொழி வாசகத்தின் அக்காடிய மொழிபெயர்ப்பாகும். இஙகு பிரச்சினைக்குரிய அந்த கோலெழுத்து மூலம் ku-ma-ri என்பதோடு ku-wa-ri என்றும் ku"ar என்றும் செமிட்டிய மொழிகளில் ஒன்றாகிய அக்காடிய மொழியில் எழுதப்பட்டிருப்பதை சுட்டுகின்றார்.
மேலும் இந்த மந்திரங்களின் தொகுப்பில் இந்த குறி வரி 217-இல் வருகின்றது.
217. ga-e ka-pirig A-HAki he- sikil-la he-ga dadag-ga me-en
I am the incantation priest of Ku"ar, who indeed cleansed, and also purified
I am the incantation priest of Ku"ar, who indeed cleansed, and also purified
இவ்வரிகளும் இன்னும் பலவும் சுமேரு, சுபாரு என்று வாசிக்கப்பட்ட கோலெழுத்துக் குறிகள் உண்மையில் அவர்களோடு உடன் வாழ்ந்த அக்காடிய மக்களால் குமரி என்றும் கௌரி எனறும் வாசிக்கப்பட்டதின் உண்மையை உணர்த்துகின்றன. இந்த நாட்டின் தெய்வமாக asalluhi என்றவோர் தெய்வம் இருந்ததாகவும் இத்தெய்வம் amaru-utu என்னும் சுமேரு தெய்வம் எனறும் அதுவே அக்காடியர்களால் மருது (Marduk) என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகின்றது. இன்னும் விரிவாக இவற்றை ஆய்ந்தால், மருதை (> மதுரை) குமரி நாடு என்றவாறு வரும் பாண்டி நாட்டு பழக்க வழக்கங்களோடு பெரிதும் தொடர்பு கொண்டுள்ளமை தெரிய வரும்.
Dr K Loganathan Krishnan @ Ullaganar
No comments:
Post a Comment