Translate

Saturday 14 January 2017

The Metaphysical Gynecology of Tirumular - Part 12

The Conception and Birth





The following three verses are testimony to the factual observations that are essentially scientific and how valuable they were deemed for the science of gynecology attesting to the fact that it was a well-developed natural science at the time of Tirumular and which has survived in the works of the later Siddhas. We shall only  note some salient points here.

The sexual union is recommend only as an expression of psychic union, the union of the souls of the man and woman who would be the parents of the a child.  The man is required to praise the female so that she is psychologically ready not only for coitus but also for conception. The conception can fail if there is unconscious resistance on the part of the woman. Lavishing her with praises about her feminine charms as fore play, not only readies her mind but also the body and because of that.

Tirumular also notes the presence of genetic processes that are operative while the fetus is growing. There are certain determinations like life span, personal qualities and so forth, which are built up during this phase. Later he will explain all these in terms of mantras at work during such moments.


20

1943

கொண்ட குணனே நலனே நற்கோமளம்
பண்டை யுருவே பகர்வாய் பவளமே
மிண்டு தனமே மிடைய விடும்போதில்
கண்ட கரணமும் உட்செல்ல கண்டு விடே

உரை:

தன் பெண் துணையைப் புணரும் முன் அந்த மாதின் மனங்குளிரும் வகையில் அவளை நற்குணத்தினள், நலம் தருபவள், அழகில் நற்கோமளம் போன்றவள், பெண்மை இலக்கணம் பிழையாத உருவினைக் கொண்டவள் பவளம் போன்ற சிவப்பு இதழ்களை கொண்டவள் என்றெல்லாம் கூறி, அகத்தடையெல்லாம் நீக்கி, பெருத்த கொங்கைகளை மிடைந்து, ஆண்குறி நலமே கருகுழிக்குள் செலக் கண்டு வித்தை விட வேண்டும்.

20.

1943.

koNda kuNanee nalanee naRkoomalam
paNdai yuruvee pakarvaay pavaLamee
miNdu tanamee midaiya vidum pootil
kaNda karaNamaum udcella kaNdu videe

Meaning:

One must praise the woman saying she has excellent personal qualities, good nature, beautiful and precious like gems, has a feminine figure as extolled by the ancients, has lips beautifully red like the coral and so forth.  Having thus praised and made her fully agreeable to intercourse, clasping her closely against the chest of large breasts, one should release the seminal fluid ensuring prior to that the male organ is well inside the opening towards the womb.

21.

1944.

விட்டபின் கர்ப்ப உற்பத்தி விதியிலே
தொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதிய
கட்டிய வாள் நாள் சா நாள் குணங் கீழ்மை சீர்ப்
பட்ட நெறி இதென்று எண்ணியும் பார்க்கவே.

உரை:

இவ்வாறு ஆண் வித்துவை, சுக்கிலத்தை, விட்ட பின் கர்ப்ப உற்பத்தி ஏற்கனவே விதிக்கப்பட்ட நெறிகளுக்கு ஏற்ப நடக்கும். அது பொழுது கரு உற்பத்தியாகி உருப்பெறும் காலங்கள், வளர்ந்து வரும் போது அமையும் தோற்றங்கள், அக்கரு வளரும் போது அமைகின்ற வாள் நாள் சா நாள் போன்ற ஆயுள் நிலமைகள், அமைகின்ற கீழான மேலான குணங்கள் போன்றவை படுகின்ற நெறி இதுவென்றும் எண்ணியும் பார்க்கவேண்டும்.

21.

1944.

viddapin karppa uRpatti vitiyilee
thodduRuG kalaaGkaL toonRak karutiya
kaddiya vaaL caa naaL kuNaG kiizmai ciirp
padda neRi ithenRu eNniyum paarkkavee

Meaning:

Having released the seminal fluid  as above, the fertilization will take place in accordance with the rules of fetus formation. There will be stages of onset and growth of the fetus and during which it will also be written how long it will survive, when it meets with death, the noble and evil personal qualities and so far. One must take note of such processes and understand them all.

22.

1945.

பார்த்திட்டு வையத்துள் பரப்பற்று உருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும்
மூப்புற்றே பின்னாளில் ஆம் எல்லா உள்ளவே

உரை:

இவ்வாறு பார்த்து நாம் வரும்போது, உலகத்தொடக்கு யாதுமின்றி  கருவானது கருப்பையில் நலமே உருப்பெறும். பிறகு முற்றாக வளர்ந்த பின், கச்சினை வருத்தும் பெரும் கொங்கைகள் உள்ள மங்கையை நீங்கி, பிறந்து உலகத் தொடக்கு உறும். இவ்வாறு பிறக்கும் சிசுக்கள் சில இரண்டு மாதங்களுக்கு மேல் வாழாது போகும். சில நெடுங்காலம் வாழ்ந்து மூப்புற்றே பின்னாளில் மடியும். இவை அனைத்தும் சிந்தித்து தெளிதற்குரிய விசயங்களாகும்.

22.

1945.

paarttiddu vaiyattuL parapaRRu uruppeRRu
vaarcceRRa kongkai madantaiyai niikkiyee
ceertuRRu irutiGkaL ceeraatu akalinum
muupuRRee pinnaaLil aam ellaa uLLavee

Meaning:

As we observe and care for the growth of the fetus as above, the fetus develops inside the womb undisturbed by external events of the world. Then when fully grown, it escapes the womb of the woman of large breasts crushing the tight breast bands and joins the world. Such a child may sometimes live for less than two months; sometimes will live for long and die of old age. All these facts must be pondered upon to understand the whole process.

Comments: Since the verses are quite self-explanatory, additional comments are not given.




Loganathan @ Ullaganar

( editing and re-paragraphing by his student )



( picture from http://www.imagesource.com/, with thanks )

No comments:

Post a Comment